புதுச்சேரியில் காங்., - திமுக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை; தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்றோ, நாளையோ முடியும்: நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தெரியும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையே புதுவையில் தேர்தல் யுத்தத்துக்கு தயாராகி விட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை தங்கள் வசம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன.

அதே நேரத்தில், ஆட்சி கவிழ்ப்பு திட்டத்துக்கு அடுத்தபடியாக, மற்ற கட்சிகளை சேர்ந்த மேலும் சில பிரபலங்களை இழுப்பதற்காக  காய் நகர்த்தி வருகிறது பாஜ. இதனால், காங்கிரஸ் தரப்பு சற்று உஷாராகவே இருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையே தேர்தல் நெடுங்குவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி; புதுச்சேரியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் -திமுக இடையேயான 2-ம் கட்ட தொகுதி பங்கீட்டு இன்றோ, அல்லது நாளையோ முடிவுக்கு வரும். இன்று மாலை புதுவை வரும் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது. தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபின் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என கூறினார்.

Related Stories: