×

பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணி-பொதுமக்கள் கடும் அவதி

பொன்னை : பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் டெண்டர் எடுத்து 6 மாதங்கள் கடந்தும் சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில்  கீரைசாத்துலிருந்து கோடியூர் செல்லும் சாலை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பிரதான சாலையாக உள்ளது.

இச்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டு, தற்போது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் சாலையை சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்க அரசு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்தும் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கீரைசாத்து- கோடியூர் செல்லும் சாலை குண்டும் குழியுமானதால், அவ்வழியாக வாகனங்கள் சென்றுவர சிரமப்பட்டனர். இதையடுத்து சாலையை சீரமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசு டெண்டர் விட்டது.

இதையடுத்து ஒப்பந்ததாரர் சாலையை சீரமைக்கும் பணிக்காக, ஜல்லி கற்கள் கொட்டினார். அவ்வாறு ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதங்கள் கடந்தும் சாலை சீரமைக்கும் பணியை கைவிட்டு கிடப்பில் போட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Keeraisathu panchayat ,Ponnai , Ponnai: Steps have been taken to renovate the unpaved road after 6 months of taking tender in Ponnai next Keeraisathu panchayat.
× RELATED கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 5...