மாநில ஹாக்கி போட்டி சென்னை அணி சாம்பியன்

திருப்பரங்குன்றம் : திருநகரில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் கோவில்பட்டி, திருநெல்வேலி, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த தமிழ காவல்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை சேர்ந்த 26 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அணியும் சென்னை மாநகர காவல்துறை அணியும் மோதின. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை சென்னை மாநகர காவல்துறை அணியும் மூன்றாம் இடத்தை கோயில்பட்டி எக்சலன்சி அணியும் பிடித்தன. வெற்றிபெற்ற அணியினருக்கு ஹாக்கி கிளப்சங்க தலைவர் கண்ணன், நிர்வாகிகள் கண்ணன், கனகராஜ், செந்தில், பாலு, திருநகர் ஹாக்கி சங்க செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கோப்பை வழங்கினர்.

Related Stories:

>