×

மின் விநியோகம் செய்யும் எந்த தனியார் நிறுவனமும் இனி உரிமம் பெற தேவையில்லை!: மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்?

டெல்லி: மின்சார விநியோகம் செய்யும் எந்த தனியார் நிறுவனமும் இனி உரிமம் பெற தேவையில்லை என்ற சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. மின்சார விநியோகத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி மத்திய அரசிடம் உரிமம் பெறுவதற்கு பதிலாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தாலே போதுமானது.

ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் மின் விநியோகம் செய்யவுள்ள தனியார் நிறுவனம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தால் போதும். அத்துடன் ஒரே இடத்தில் பல நிறுவனங்கள் ஒரே பாதையில் மின்சார விநியோகம் செய்ய இனி அனுமதி வழங்க வழிவகை செய்யப்படும். அத்துடன் தனியார் மின் விநியோக நிறுவனங்கள் தாங்கள் விரும்பிய வாடிக்கையாளர்களை தேர்வு செய்ய முடியும். அதேபோல் வாடிக்கையாளரும் தாங்கள் விரும்பிய மின் விநியோக நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இயலும்.

அதேநேரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு பதிலாக தனியார் நிறுவனங்கள் உச்சபட்சமான கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளவும் இந்த திருத்த மசோதா வழிவகை செய்கிறது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த மசோதா ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டதிட்டங்களை, தனியார் நிறுவனங்கள் பின்பற்றாத சூழல் உருவாகும் என்று எச்சரித்துள்ளது.


Tags : Parliament , Power Supply, Private Company, Licensing, Amendment Bill, Parliament
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...