திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சு நல்ல முடிவு ஏற்படும் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை

சென்னை: தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் 59க்கும் மேற்ப்பட்ட மாநிலக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பின்னர் ேக.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக, பாஜ கூட்டணியை 234 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் வகையில் தேர்தல் பணிகள், பொறுப்புகள், பிரச்சார யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான குழுவுடன் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அப்போது நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

Related Stories:

>