×

மீண்டும் மம்தா வந்தால் மே.வங்கம் காஷ்மீர் ஆகிடும்: சுவேந்து சர்ச்சை

நந்திகிராம்: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தாவை எதிர்த்து திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். பெஹாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுவேந்து, ‘‘ஷியாமா பிரசாத் முகர்ஜி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த தேசம் முஸ்லிம் தேசமாக மாறியிருக்கும். நாமெல்லாம் வங்க தேசத்தில் வாழ்ந்திருப்போம். இங்கு மீண்டும் மம்தா முதல்வரானால், மேற்கு வங்கம் இன்னொரு காஷ்மீராக மாறிவிடும்’’ என்றார். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘2019 ஆகஸ்ட்டுக்குப் பிறகு காஷ்மீர் சொர்க்க பூமியாகி விட்டதாக பாஜககாரர்கள் கூறுகிறார். அப்புறம் மே.வங்கம் காஷ்மீராக மாறினால் என்ன?’’ என உமர் அப்துல்லா கிண்டலடித்துள்ளார்.

Tags : Mamta ,Kashmir , If Mamata returns, Bengal will become Kashmir: Suwandu controversy
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...