×

தவறு நடந்ததாக நினைத்தால் நீதிமன்றம் செல்லலாம்: கோபால்சாமி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

தபால் வாக்கு என்பது புதிது அல்ல. இதற்கு முன்பாக ராணுவத்தில் உள்ளவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள், போலீசாருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மற்ற தொகுதியில் தேர்தல் பணி கொடுக்கப்படும். இதனால் அவர்கள் தபால் வாக்கு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளிக்கும். தற்போது கூடுதலாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு பணம் கொடுக்கிறார்கள்.

இதைவிடவா தபால் வாக்கு போடும்போது முறைகேடு நடந்திட போகிறது. இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தே தபால் வாக்கு போடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பாக கொரோனா நோயாளிகள் அருகாமையில் செல்வதையே அனைவரும் தவிர்த்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்ததில் ஒரு தவறும் இல்லை. நியாயமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நோயால் அவதிப்படுபவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவது என்பது சரியானது தான். அதில் ஒன்றும் தவறு இல்லை.

தபால் ஓட்டை விட்டுவிடுங்கள் வாக்கு சாவடிக்கு நேரடியாக வந்து ஓட்டு போட வருகிறவர்களில் எத்தனை பேர் பணம் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். எனவே, நேரடியாக வாக்குசாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் தன் ஓட்டை விற்காமல் நேர்மையாக வாக்காளிப்பார் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது. தபால் வாக்கு அளிக்கும் மூத்த குடிமகன்களில் பலர் இறுதி காலத்தில் நாம் ஏன் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் சிலர், வருவதை ஏன் விட வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

எனவே, எல்லா வற்றிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. யாராக இருந்தாலும் எந்த ஒரு வாக்காளரும் பணம் வாங்காவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் வாக்காளர் ஒருவர் யாரிடம் பணம் வாங்கினாரோ அவருக்கு சாதகமாக தானே வாக்களிப்பார். இதுவும் முறைகேடு தானே. அதைவிடவா தபால் வாக்கில் முறைகேடு நடந்துவிட போகிறது. தபால் வாக்குகளை எண்ணும் போது நடப்பது வேறு. தபால் வாக்கு அளிக்கும் போது நடப்பது வேறு. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கையின் போது மொத்த எண்ணிக்கையை மாற்றி எழுதியது நடந்துள்ளது. பின்னர், அவர்கள் பிடிபட்டதும் நடைபெற்றுள்ளது. ஆனால், இப்போது ஓட்டு இயந்திரம் வந்துள்ளது.   

ஆனால், இப்போது தவறுகள் நடைபெற வாய்ப்பு இல்லை. தபால் ஓட்டில் இரண்டு விதமாக பிரச்னை வரும். என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதை சரியாக அனுசரிக்கவில்லை என்றால் தபால் ஓட்டு வீணாகிவிடும். அப்பாவு வழக்கில் கூட தபால் ஓட்டு எண்ணும் போது தவறு என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர தபால் ஓட்டு போடும் போது தவறு நடைபெற்றது என்று கூறவில்லை. தபால் ஓட்டில் யார் தவறு நடந்தது என்று நினைக்கிறார்களோ அவர்கள் நீதிமன்றம் செல்லலாம். தபால் ஓட்டு போடும் போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. தபால் ஓட்டில் இரண்டு விதமாக பிரச்னை வரும். என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதை சரியாக அனுசரிக்கவில்லை என்றால் தபால் ஓட்டு வீணாகிவிடும். அப்பாவு வழக்கில் கூட தபால் ஓட்டு எண்ணும் போது தவறு என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர தபால் ஓட்டு போடும் போது தவறு நடைபெற்றது என்று கூறவில்லை.


Tags : Gopalsami ,electoral commissioner , Go to court if you think something went wrong: Gopalsamy, former Chief Election Commissioner
× RELATED மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்