×

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை மாற்றும் திட்டம்: அப்பாவு, திமுக முன்னாள் எம்.எல்.ஏ

தபால் ஓட்டை எண்ணி முடித்துவிட்டு தான் அடுத்த ஓட்டு எண்ணிக்கையை தொடங்குவார்கள். என்னை பொறுத்தவரையில் எனக்கு அப்படி நடக்கவில்லை. தபால் ஓட்டை பின்னாடி வைத்துவிட்டார்கள். 11 மணிக்கு பிறகு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பல முயற்சிகள் எடுத்தும் அதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. நான் போட்டியிட்ட தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது கவுன்டிங் ஏஜென்ட், அதிமுகவினர் உட்பட அனைவரையும் வெளியே செல்லும்படி கூறினார். கடைசி 3 ரவுன்ட் அறிவிக்கவில்லை என்று கூறினேன். தபால் ஓட்டையும் எண்ணவில்லை என்றேன்.   

பின்னர், சுமார் 300 தபால் ஓட்டை எடுத்து அரசிதழில் பதிவு செய்யப்பட்ட அதிகாரி அட்டஸ்டட் செய்யவில்லை. அவர் யார் என்றே தெரியவில்லை. இதனால், தபால் ஓட்டை எண்ண வேண்டும் எனக் கூறினோம். அப்போது தான் மத்திய துணை ராணுவம் எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். சக ஊழியர்களிடம் அட்டஸ்டேசன் வாங்கி அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடுவார்கள். அதிலேயே பல்வேறு பிரச்னைகள் நடக்கிறது. இந்தசூழலில் நீதிமன்றத்தை நாடினேன். பல வருடங்கள் அலைக்கழிக்கப்பட்டேன். பின்னர் ஜெயச்சந்திரன் என்ற நீதிபதி பொறுப்புக்கு வந்த 45 நாளில் இந்த வழக்கை முடித்துவைத்தார். அப்போது, திரும்பவும் தபால் ஓட்டை என்னும்படி அவர் உத்தரவிட்டார்.

தேர்தல் அதிகாரிகள், நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் தபால் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதலில் தேர்தல் ஆணையம் எண்ணும் போது 93 ஓட்டில் தோல்வி என்று கூறினார்கள். பின்னர், நீதிமன்றம் ஓட்டு என்னும் போது 98 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்றதாக கூறினார்கள். இந்த ஓட்டு எண்ணிக்கையை ஏற்றுக்கொண்டு இன்பதுரையும், நானும் கையெழுத்திட்டோம். ஆனால், ரிசல்டை அறிவிக்கவில்லை. நாங்களும் பல முயற்சிகளை செய்துபார்த்தோம் ஆனால் முடியவில்லை.

80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தபால் ஓட்டை தேர்தல் அதிகாரிகள் தான் கொடுப்பார்கள். ஆனால், இப்போது மக்கள் நலப்பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பிடிஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் மூலமாக ஓட்டை பெற்று கையெழுத்து வாங்குகிறார்கள். இந்த நடைமுறையால் முறைகேடுகள் நடைபெறும். ஆளும் கட்சியினருக்கு ஆதரவான அதிகாரிகள் செல்லும் போது அங்கு பல குழப்பங்கள் ஏற்படும். விருப்பப்பட்டவர்கள் தபால் ஓட்டு போடலாம் என்று வரும் போது பணத்தை பெற்றுக்கொண்டும் தபால் ஓட்டு போடும் நிலை ஏற்படலாம்.

இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தபால் ஓட்டு வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. இப்போது உள்ள காலகட்டத்தில் நேரடியாக சென்று ஓட்டு போடலாம். வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தபால் ஓட்டிற்கு மட்டும் இவர்கள் தனிக்கவனம் செலுத்துவது ஏன்? ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை மாற்ற தபால் ஓட்டு என்பதை முக்கியத்துவப்படுத்துகிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தபால் ஓட்டை தேர்தல் அதிகாரிகள் தான் கொடுப்பார்கள். ஆனால், இப்போது மக்கள் நலப்பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பிடிஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் மூலமாக ஓட்டை பெற்று கையெழுத்து வாங்குகிறார்கள்.

Tags : Appavu ,DMK ,MLA , Plan to change the election in favor of the ruling party: Dad, former DMK MLA
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...