×

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் குடும்பத்துக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே இலுப்பூர் சந்திப்பு சாலையோரம் கடந்த 2018ம் தேதி இரவு எந்தவித தடுப்பும் வைக்காமல் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற திருவள்ளூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் துணை மேலாளர் ராஜேந்திரன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்நிலையில், இந்த விபத்திற்கு நஷ்டஈடு கோரி அவரது மனைவி ஹேமமாலினி, மகள் பிரியதர்ஷினி, மகன் ஜெயவர்ஷன் மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றமான மோட்டார் வாகன விபத்துக்கள் தீர்ப்பாயம் 1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜராகி வாதாடினார். இதில் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ராஜேஷ் மாரிமுத்து சமரச தீர்ப்பாயத்தில் ஆஜராகி மனுதாரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சாலை விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.42 லட்சம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Special Court Action Tribunal , Rs 42 lakh compensation for the family of a private company assistant manager who died in a road accident: Special court orders action
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...