×

கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் முதலாவது அணு உலையில் நேற்று தொழில்நுட்ப பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி 21 முதல் இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்புக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழக மின்வாரியத்துக்கு கிடைக்கக்கூடிய சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags : Koodankulam , Koodankulam first nuclear reactor shutdown
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...