×

மிஸ்டர் வாக்காளர்: போக்குவரத்து நெரிசலால் அல்லல்படும் செங்குன்றம்

* செங்குன்றம் சாம் (தொழில் முனைவோர்)
மாதவரம் தொகுதிக்குப்பட்ட செங்குன்றம் பகுதி வழியாக தான் சென்னை-கொல்கத்தா சாலை செல்கிறது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வருகிறது. இந்த பகுதிகளில் லாரிகளை நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாலையில் வாகனங்களை நிறுத்தி தான் லாரி மற்றும் இதர வாகனங்களை பழுது சரி செய்ய வேண்டியுள்ளது. எனவே சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்காக சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது போன்று  ஆட்டோ தொழிற்சாலை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

அதே போன்று செங்குன்றத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த சாலையில் செங்குன்றத்தில் இருந்து சோத்துப்பாக்கம் வழியாக சந்திப்பு, செங்குன்றத்தில் இருந்து வடகரை நோக்கி செல்லும் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். இதனால், செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய சூழல் உள்ளது. ரெட்டேரி சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றி படகு சவாரி விடப்படும் என்று கூறினார்கள். இதனால், அந்த ரெட்டேரி சுற்றுலாதளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெயரளவில் பூங்கா மாற்றியுள்ளனர். இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதி திமுக வசம் இருப்பதால் ஆளும் அதிமுக அரசு கண்டு கொள்வதில்லை. எனவே, இந்த முறை அதிமுக அரசுக்கு இந்த தொகுதி மக்கள் பாடம் புகட்ட காத்து கொண்டிருக்கிறார்கள்.

* இலை கட்சியில் சீட்டுக்கு சண்டை
தமிழகத்துல, இலைகட்சியோட கூட்டணி கட்சியான பழத்துக்கு சீட் ஒதுக்கியிருக்காங்க. பாஜ, தேமுதிகவுடனும் கூட்டணி பேச்சு நடக்குது. இதற்கிடையில திருப்பத்தூர் தொகுதி இலைகட்சியில சீட் கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகர செயலாளர் டி.டி.குமார், டாக்டர் திருப்பதி உள்ளிட்டவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்குறாங்க. ஆனா திருப்பத்தூர் தொகுதியை, கூட்டணி கட்சியான பழத்துக்கு ஒதுக்குவதாக அரசல் புரசலாக தகவல் வெளியாகியிருக்குது. இந்த நிலையில, திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு கடையில் இலைகட்சிக்கு பிரச்சார வாகனம் தயாராகி வருதாம். இந்த வாகனம் வீரமான அமைச்சருக்கா? அல்லது திருப்பத்தூர் தொகுதியில் சீட்டு கேட்டு போட்டி போடும் 3 பேரில் ஒருத்தருக்கா? என்ற கேள்வி பழம் கட்சிக்காரங்க மத்தியில எழுந்திருக்கு. இலை கட்சிக்கு திருப்பத்தூர் தொகுதியில சீட் இல்லைன்னும் பேசிக்கிறாங்க. அப்படி இருக்க பிரச்சார வாகனம் தயாராகி வர்றதால, பழம் கட்சிக்காரங்க ரொம்ப அப்செட்ல இருக்காங்களாம். சீட்டு ஒதுக்குறத பொறுத்துத்தான், கூட்டணிக்கு வேலை செய்றதா? வேண்டாமான்னு முடிவு பண்ணுவாங்களாம் பழம் கட்சிக்காரங்க.


Tags : Voter , Mr. Voter: A steep incline not caused by traffic congestion
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி