தொகுதி மாற விரும்பும் ராஜேந்திர பாலாஜி: பாஜகவுக்கு விட்டுக் கொடுத்த தலைமை

தற்போதைய தொகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் தொகுதி மாறி போட்டியிட விரும்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்துள்ளதோடு அவர் கேட்ட மாற்று தொகுதியை பாஜகவுக்கு தள்ளிவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழக அமைச்சர்களில் எப்போதும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஒரு ரகம் என்றால், இவர் கெட்ட வார்த்தைகளை பேசுவது, மிரட்டுவது, தடாலடியாக பேசுவது என்று பெயர் எடுத்தவர். விவேக் ஒரு படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து ஒரு டயலாக் பேசும்போது, நாங்க லெப்டுல கையை போடுவோம். ரைட்டுல இன்டிகேட்டர் போடுவோம். ஆனா நேரா போயி, எல்லோரையும் கன்ப்யூஸ் பண்ணுவோம் என்பார். அதேபோல, இவரும் திடீர் திடீரென்று எந்த அணியை ஆதரிப்பார் என்றே கூற முடியாது.

சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவார். திடீரென்று மோடிதான் டாடி என்பார், அடுத்தநாளே முதல்வர் எடப்பாடியை புகழ்வார். அடுத்தநாள் ஓபிஎஸ் சிறந்த நிர்வாகி என்பார். இதனால், ராஜேந்திர பாலாஜியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தநிலையில் அவருக்கும், அவரது மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே மோதல் எழுந்தது. இது சாதி மோதலாகவும் மாறும் சூழ்நிலை உருவானது. இதனால் தொகுதி மாற வேண்டும் என்று முடிவு செய்து, ராஜபாளையம் தனக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தார். இதற்காக மேலிடத்தில் பல முயற்சிகளை செய்தார். ஆனால், அவரது முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முட்டுக்கட்டை போட்டுள்ளாராம். பழைய தொகுதியான சிவகாசியிலேயே போட்டியிட வேண்டும் என்றும் கூறிவிட்டாராம். அதோடு, ராஜபாளையத்தை பாஜகவுக்கு தள்ளிவிட்டுள்ளார்களாம். இதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Related Stories:

>