×

கர்நாடகாவில் நாளை பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்கிறார்

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவையில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் எடியூரப்பா நாளை தாக்கல் செய்கிறார். கர்நாடகாவில் மஜத-பாஜ கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக, தற்போதைய முதல்வர் எடியூரப்பா இருந்தபோது 2 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவர் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு 2008, 2009, 2010ம் ஆண்டுகளில் மூன்று பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ,கடந்தாண்டு 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது அவர், 2020 - 2021 நிதியாண்டிற்கான 7வது பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இதில், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.


Tags : Karnataka ,Eduyurappa , Budget in Karnataka tomorrow: Eduyurappa files
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...