63 ரவுடிகள் கைது

திருவள்ளூர்: தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 63 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தையொட்டி ஆந்திர மாநிலம் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 98 ரவுடிகள் கணக்கெடுப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 63 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ள 96 பேரில், இதுவரை 90 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மற்றவர்களும் உடனடியாக ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>