திமுக-வுடன் தொகுதி பங்கீடு விரைவில் முடியும் என எதிர்பார்க்கிறோம்!: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன்  பேசினார். அப்போது, திமுகவுடன் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக பேச்சுவார்த்தையை முடிக்க தயாராக உள்ளோம். அதிக தொகுதிகளில் போட்டியிட கட்சிகள் விரும்புகின்றன; நாங்களும் விரும்புகிறோம். ஒவ்வொரு கட்சியும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து கூட்டணி தலைமையிடம் கூறியுள்ளார்கள். மற்ற கட்சிகளை ஒப்பிட்டு நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்கவில்லை என தெரிவித்தார்.

Related Stories:

>