மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை...! சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.70.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான்.

தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், ஆனால் இரன்டு தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ. 4,216-க்கு விற்பனை. அதைபோல் வெளியின் விலை கிராமிற்கு ரூ. 20 காசு உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>