×

மக்களே கவனம் தேவை...! அமைதியாக அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேர் பாதிப்பு: 108 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,327 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக உயர்ந்தது.

* புதிதாக 108 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,656 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,234 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,80,304 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,94,97,704 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 96.98% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.61% ஆக குறைந்துள்ளது.

Tags : India , People need attention ...! Silent rising corona: 18,327 victims in India in last 24 hours: 108 dead
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...