×

அமைச்சராகியும் தொகுதியை கண்டுகொள்ளாத எம்எல்ஏ! திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 1951ம் ஆண்டு முதல் திருச்சி-1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கடைவீதிகள் நிறைந்த பகுதி என்பதால் வணிகமே பிரதான தொழிலாக இருக்கிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சுற்றுலாத்துறை அமைச்சராக வெல்லமண்டி நடராஜன் உள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெரோம் ஆரோக்கியராஜ் போட்டியிட்டார்.

வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். திருச்சி கிழக்குத் தொகுதி மாநகரத்தின் இதயப்பகுதி என்பதால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்த்து வைக்கப்பட வில்லை. குறிப்பாக கால் நூற்றாண்டு கோரிக்கையான மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் கிடப்பிலே உள்ளன.  மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தலைவலியாக உள்ள காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான கள்ளிக்குடி காய்கனி சந்தைக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை. மாநகரில் கூவமாக மாறி வரும் உய்யக்கொண்டான் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது. சத்திரம் பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ரயில்வே மேம்பாலமான மாரீஸ் மேம்பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்தது. பாலம் விரிசல் விட்டது தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள்.

‘கழிவுநீர், குப்பைகளால் சுகாதாரமின்மை’
காங்கிரஸ் கட்சியின் ஜெரோம் ஆரோக்கியராஜ் கூறுகையில், ‘மாநகரில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும்  குப்பைகளால் சுகாதாரமின்மை என்பதே பிரதான பிரச்னையாக இருந்து வருகிறது. மாநகரில் தேவையான இடங்களில்  மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலை விரிவாக்கம் போன்றவை செய்து  தரப்படவில்லை. திருச்சியின் புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவில்லை.  பஸ் நிலையம், ரயில்வே ஜங்ஷன், ஏர்போர்ட் என மாநகரின் முக்கியமான  போக்குவரத்து ஸ்தாபனங்களில் உள்ள பிரச்னைகள் தீர்த்து  வைக்கப்படவில்லை. மலைக்கோட்டை ரோப்கார் திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, காந்தி மார்க்கெட் பிரச்னை என இதில் எதுவுமே தீர்வு காணப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறைக்கு வளம் சேர்க்கவில்லை’ என்றார்.

‘₹1,200 கோடி நிதியில் பாதாள சாக்கடை’
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறும்போது, ‘மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1,200 கோடி நிதியில் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. அரியமங்கலம் குப்பைகிடங்கில் உள்ள குப்பைகள் இன்னும் 6 மாதத்தில் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடும். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக கிழக்கு தொகுதி உள்ளது. காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்ற வாக்குறுதி தேர்தலின்போது அளித்தேன். அதை இன்று வரை நிறைவேற்றி வருகிறேன். மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு ரோப்கார் திட்டம் செயல்படுத்துவதில் தரைப்பகுதி, மற்றும் மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. திருவெறும்பூர் பகுதிகளில் இருந்து பார்த்தால் மலைக்கோட்டையே விநாயகர் போன்று காட்சி அளிக்கிறது. அதனால் மலைக்கு சேதமின்றி ஒரிஜினல் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றா

Tags : Trichi East constituency ,Wellamandy Natarajan , MLA who does not see the constituency becoming a minister! Trichy East MLA, Minister Vellamandi Nadarajan
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்