மூ.மு.கழகம், புரட்சி பாரதம் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தமகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், அதிமுக, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில்  நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன் மூர்த்தி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related Stories: