பாஜக -அதிமுக தீய சக்திகளை எந்த காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது :சீதாராம் யெச்சூரி ஆவேசம்

சேலம் : கமல்ஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர்தான் என்றும், தமிழகத்தைப் பொறுத்த வரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்காது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அழகாபுத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார்.

அதன் பின்னர், தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “கமல்ஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர்தான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்காது” என்றார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. என்றும், பாஜகவை திமுக கூட்டணி திறம்பட எதிர்கொள்ளும் எனவும் கூறினார்.

மேலும் பாஜக -அதிமுக தீய சக்திகளை  எந்த காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஜனநாய உரிமைகள் பறிக்கப்படுகின்றது; எனவே தமிழகத்தில் பாஜக-அதிமுக  கூட்டணி அகற்ற வேண்டும் என்றும் சீதாராம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 80 வயதிற்கும் மேற்பட்டோர் தேர்தலில் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து புகார் அளித்துள்ளோம். 80 வயது மதிக்கத்தக்கவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு அளிப்பார்கள் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஓட்டை வேறு யாரும் போடக்கூடாது என்றும் கூறினார்.

Related Stories:

More
>