சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி

சுவிட்சர்லாந்து சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் அரிஸ் வாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் காந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் பிரான்ஸின் ரோக்சலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதேபோல இந்திய வீரர்கள் சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினர்.

Related Stories: