கடந்த 5 ஆண்டுகளில் நத்தம் விஸ்வநாதன் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி?.. ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது ஊழல் புகார் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நத்தம் விஸ்வநாதன் ரூ.279 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரூ.279 கோடி வரி பாக்கியே இருக்குமானால் வருமானம் ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும். நத்தம் விஸ்வநாதன் தனது பதவிக்காலத்தில் ஊழல் மூலம் ரூ.2,000 கோடி சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாடினார். கடந்த 5 ஆண்டுகளில் நத்தம் விஸ்வநாதன்  சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>