×

அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் : அதிபர் ஜோபிடன் புகழாரம்!!

வாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக அதிபர் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளார். செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவினரோடு அதிபர் ஜோ பிடன் உரையாற்றினார்.காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இந்திய, அமெரிக்கர்களை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியதில் முக்கிய பொறுப்பு வகித்த அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகன், வினய் ரெட்டி உள்ளிட்டோரை அவர் குறிப்பிட்டு பேசினார்.

மக்கள் பணிக்கு அதிக எண்ணிக்கையில் இந்திய - அமெரிக்கர்கள் வருவது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜோபிடன் கூறியுள்ளார்.தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அதிகம் பேர் மக்கள் பணியில் ஈடுபட்டு இருப்பது மேலும் பல தெற்கு ஆசியர்களை பொது பணிக்கு நேராக வழிநடத்தும் என்பதில் ஐயம் இல்லை என்றும் அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அதிபராக பதவியேற்ற 50 நாட்களுக்குள் பிடன் தனது நிர்வாகத்தில் உள்ள முக்கிய இலக்காக்களில் 55 இந்திய - அமெரிக்கர்களை பணியில் அமர்த்தினார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Indians ,United States ,Chancellor , ஜோ பிடன்
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...