எம்ஜிஆர் நகர் மயானம் அருகே குப்பை கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரி : தர்மபுரி எம்ஜிஆர் நகர்-ஏஎஸ்டிசி நகர் சாலையின் இடையே மயானம் உள்ளது. இந்த மயானத்தின் சுற்றுச்சுவர் சாலையோரத்தில், குப்பைகள் கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து குப்பையை அகற்றிவிட்டு, குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குப்பை குவித்து வைக்கப்பட்ட பகுதி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு சேர்ந்த பகுதியாகும். வாரம் ஒருமுறைகூட இப்பகுதியில் குப்பை அகற்றுவதில்லை. மாதகணக்கில் குப்பை கொட்டி குவியலாக உள்ளதால், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனே குப்பைகளை அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>