தா.பேட்டை பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி-அதிகாரி ஆய்வு

தா.பேட்டை: தா.பேட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

தா.பேட்டை அருகே உள்ள சிறு குடியிலிருந்து வெள்ளாளப்பட்டி வரையிலான தார்சாலை அகலப்படுத்தும் பணி ரூ.2.90 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முசிறி நெடுஞ்சாலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அமைக்கப்படும் தார் சாலையின் அகலம் பயன்படுத்தும் ஜல்லிகற்கள், கலவை மற்றும் தார் ஆகியவற்றின் தரம் குறித்தும் பார்வையிட்டு சாலை அமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அப்போது நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More
>