×

ஆற்காட்டில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு-கலெக்டர் பங்கேற்பு

ஆற்காடு : ஆற்காட்டில் நூறு சதவீதம்  வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும், தேர்தலின் போது நூறு சதவீதம் வாக்குப்பதிவு இலக்காக இருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆற்காடு தோப்புக்கானாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிளாட்ஸ்டன்  புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை எஸ்பி சிவகுமார், சப்- கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் உறுதி மொழியை வாசிக்க அதனை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனர். அனைத்து அரசியல்  கட்சிகளை சார்ந்தவர்களும்,  பொதுமக்களும்  தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து  வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கேட்டுக்கொண்டார்.

இதில் ஆற்காடு தாசில்தார் காமாட்சி,  மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ், தேர்தல் துணை தாசில்தார்  வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி, விஏஓ மஞ்சுநாதன்  மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.வாலாஜா: வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் ரங்கோலி கோலம் போட்டு அசத்தினர்.

இதில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு பணமோ அல்லது பரிசு பொருளோ வாங்காமல் அச்சமின்றி வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை வாசித்தார். இதனை கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் , மகளிர் சுய உதவிக்குழு திட்ட இயக்குநர் ெஜயராமன், உதவி திட்ட அலுவலர் சுபாஷ்சந்திரன், கல்லூரி முதல்வர் க.பரமேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.



Tags : Arcot , Arcot: In Arcot, an awareness program was held under the chairmanship of the Collector emphasizing 100% turnout.
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்