×

பாணாவரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பாணாவரம் : பாணாவரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பாணாவரம் ரயில் நிலையத்தில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியலட்சுமி, வருவாய் அலுவலர் சமரபுரி, விஏஓ முரளிமனோகர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் பாணாவரம் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லால்பாக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்துவதற்காக பிளாட்பாரத்தில் ேரஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அரிசி கடத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Panavaram , Panavaram: The Revenue Department confiscated 1 ton of ration rice which was smuggled on a train at Panavaram railway station.
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு...