8 மணி நேரத்தில் 8.1,7.3,7.4 என ரிக்டர் அளவிலான 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. அலறிய நியூசிலாந்து மக்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

வெல்லிங்டன் : நியூசிலாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து நில அதிர்வுகள் தொடர்ந்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உயர் நிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நியூசிலாந்தில் நேற்று 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரம் வசிப்பவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து, பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், நியூசிலாந்தில் அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.4 மற்றும் 7.3 ஆக பதிவாகின. இதையடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை மணி மீண்டும் ஒலிக்கப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து நிலா அதிர்வுகள் நீடித்து வருவதால் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறவில்லை. மறு உத்தரவு வரும் வரை உயர் நிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு திரும்பப் பெற வேண்டாம் என்று நியூசிலாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக தற்போது வரை ராட்சத அலைகள் ஏதும் எழவில்லை என்ற போதும் கடல் வழக்கத்திற்கு மாறாக கொந்தளிப்புடன் உள்ளதாக நியூசிலாந்து வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை பெரிய அளவிலான சேதங்கள் பதிவாகவில்லை என்ற போதும் அவசர நிலையை எதிர்கொள்ளும் வகையில்,பேரிடர் மேலாண்படை படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நியூசிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>