×

நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூரு: மத்திய அரசு பட்டியல் வெளியீடு

பெங்களூரு: நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் எது என்ற ஆய்வில் கர்நாடகாவின் பெங்களூரு நகரத்திற்கு முதல் இடம் வழங்கி அதற்கான  அங்கீகாரம் கொண்ட பட்டியலை மத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்தியாவில் வாழச் சிறந்த நகரம்  குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிறந்த இடங்களை வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புறவளர்ச்சி அமைச்சகம் நடத்துகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் இடம்பெறும். இந்த நிலையில்  கர்நாடகாவில் இருந்து பெங்களூரு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன்  மூலமாகவும் மக்கள் தங்களது கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான  பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி நேற்று டெல்லியில் அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளார்.  அதில்,” சுமார் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடம்  பிடித்துள்ளது. அதேப்போன்று அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து சென்னை 4வதும், கோவை 7வதுமாக இடம் பிடித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த காணொலி காட்சி கூட்டத்தில் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், எம்.பி  பி.சி மோகன், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Bangalore , Bangalore is the best city in the country for people to live in: Central Government List Release
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...