×

சிக்கபள்ளாபுராவில் மக்கள் குரல் பாதயாத்திரைக்கு பிரமாண்ட வரவேற்பு

சிக்கபள்ளாபரா: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மேற்ெகாண்டுவரும் மக்கள் குரல் என்ற பாதயாத்திரைக்கு சிக்கபள்ளாபுரா  மாவட்டத்தில் பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. மாநில சட்டப்பேரவைக்கு வரும் 2023ல் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த  வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ‘‘மக்கள் குரல்’’ என்ற பெயரில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில்  பாதயாத்திரை நடத்த முடிவு செய்து, நேற்று முன்தினம் பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளியில் தொடங்கினார். அங்கு சிறப்பான ஆதரவு  கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தினார்.

சிக்கபள்ளாபுரா நகரின் பி.பி. சாலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கூடினர் சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட கட்சி  தலைவர்கள் வருவதற்கு முன்பே, அங்கு கூடிய கட்சி தொண்டர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன் இரு அரசின்  மக்கள் விரோத செயல்கள் குறித்து துண்டு அறிக்கைகள் வெளியிட்டனர். சிக்கபள்ளாபுரா நகர எல்லையில் சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட கட்சி  தலைவர்களுக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு ெகாடுக்கப்பட்டது. மாநிலத்தின் கலாச்சார நடனங்களான டோளு குனிதா,  டொல்லு குனிதா, வீரகாச, குச்சுப்படி, பொய்கால் குதிரை, புலிவேஷம் உள்ளிட்ட நாட்டுபுற கலைஞர்களின் நடனத்துடன் ஊர்வலாக அழைத்து  சென்றனர். தொண்டர்கள் வெள்ளத்தில் ஆமை வேகத்தில் கார் சென்றது.

அங்கு பேசிய சிவகுமார், ``கர்நாடகம் உள்பட நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டதாக பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஒரு மோடி என்ன  ஆயிரம் மோடிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அழிக்க முடியாது. கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் பாஜ ஆட்சி நடக்கிறது. ஆனால் பத்து  மாநிலங்களிலும் மக்களால் ேதர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்காமல், குறுக்கு வழியில் வருமான வரி, தேசிய புலனாய்வுபடை போன்றவற்றை காட்டி  மிரட்டி, பிற கட்சி எம்எல்ஏக்களை பாஜவுக்கு இழுத்து ஆட்சி அதிகாரம் பிடித்துள்ளனர்.

மக்கள் பாஜவை ஏற்கவில்லை. அதே சமயத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நொறுக்கும்  வகையில் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரம் பிடிப்பதன் மூலம் நாடு முழுவதும் பாஜ  ஆட்சி அமைக்கம் மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள். பாஜவின் இந்த ஜனநாயக படுகொலை நாடகத்திற்கு விரைவில் திரை விழும்’’ என்றார்.

Tags : People’s Voice ,Pathayathri ,Chikkaballapura , Great welcome to the People’s Voice Pathway in Chikkaballapura
× RELATED ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு