தேசிய புத்தக அறக்கட்டளை ஆசிரியர் மீது மானபங்க வழக்கு

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியில் ஒரு பெண்ணை கடந்த ஆண்டு மானபங்கம் செய்ததாக தேசிய புத்தக அறக்கட்டளை ஆசிரியர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய புத்தக அறக்கட்டளை ஆசிரியராக இருப்பவர் ரூபின் டி குரூஸ். இவர் மீது கடந்த மாதம் பிப்ரவரி 2ல் வசந்த்  கன்ஞ்(வடக்கு) போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூபினுக்கு நான்  அறிமுகம் ஆனேன். அப்போது நான் டெல்லியில் தங்குவதற்கு இடம் தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது வசந்த்கன்ஞ் பகுதியில் உள்ள தனது  அலுவலகத்திற்கு வரும்படியும், அங்கு நான் உதவ முடியும் என்று ரூபின்தெரிவித்தார். நம்பி அங்கு சென்ற போது மானபங்கம் செய்தார் என்று  குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி ரூபின்எந்தகருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Related Stories:

>