தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து சாதிவாரி இடஒதுக்கீட்டை நியாயமாக நடத்த வேண்டும்: கிஷான் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் கலெக்டரிடம் மனு

கோலார்: கோலார் மாவட்ட தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது, சாதிவாரியான இட ஒதுக்கீட்டை சமூகநீதி அடிப்படையில் அமைக்க  வேண்டும் என்று மாவட்ட கலெக்டரின் கிஷான் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கோலார் மாவட்ட கலெக்டர் டாக்டர்  ஆர்.செல்வமணியிடம் கிஷான் காங்கிரஸ் தலைவர் உருபாகிலு சீனிவாஸ் தலைமையிலான நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கோலார் தாலுகா,  ஏபிஎம்சி மையத்தில் தற்போது இட நெருக்கடி அதிகமிருப்பதால், கோலார்-முல்பாகல் தேசிய நெடுஞ்சாலை 75ல் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுக்க  வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் இதுவரை நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை.

மாநிலத்தில் மிக பெரிய தக்காளி சந்தையாக கோலார் விளங்குகிறது. தற்போதைய தக்காளி மார்க்கெட் இட நெருக்கடியால் தவிக்கும் நிலை உள்ளது.  புதிய ஏபிஎம்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்தால், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய வசதி ஏற்படும். நீங்கள் கண்டிப்பாக  நிலம் ஒதுக்கீடு செய்ய ேவண்டும். இதன் மூலம் விவசாயிகளின் கனவை நனவாக்க வேண்டும். மேலும் விரைவில் தாலுகா மற்றும் மாவட்ட  பஞ்சாயத்துக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மக்கள் தொகை அடிப்படையில் சாதிவாரி இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடும் போது சமூகநீதியை  கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக மாநில  தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ள விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல ேகாரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>