×

அயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவாக்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை.

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலை கட்டும் பணி கடந்தாண்டு தொடங்கியது. தற்போது, இந்த கோயில் கட்டப்படம் ராமஜென்ம பூமி வளாகம் 70 ஏக்கரில் அமைந்துள்ளது. இதை 107 ஏக்கராக விரிவுப்படுத்துவதற்கு ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
கோயில் நிலத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியின் முதல் கட்டமாக, கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள 7,285 சதுரடி நிலத்தை ₹1 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதற்காக முதல் முறையாக நிலத்தை வாங்கி இருக்கிறோம். ராமர் கோயிலுக்கு இடம் வாங்கிய அறக்கட்டளை குழுவில் இடம் பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன்,” என்றார். கடந்த 20ம் தேதி  இந்த இடத்தை ஷேத்ரா அறக்கட்டளை வாங்கி பதிவு செய்துள்ளது. கோயில் விரிவாக்கத்துக்கு மேலும் 37 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால், கோயில் வளாகத்தை சுற்றி நிலம், வீடுகள் வைத்திருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பகுதிக்குள் வரும் மத வழிபாட்டு தலங்களும் விலை பேசப்படுகின்றன. ராமர் கோயில் மட்டுமே 5 ஏக்கர் நில பரப்பில் கட்டப்பட உள்ளது. மற்ற பகுதிகளில் அருங்காட்சியம், புத்தகசாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.


Tags : Ayodhya Ram Temple Complex Expansion Trust , Ayodhya Ramer, Campus, Rs.1 crore, Trust
× RELATED “ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த...