×

அத்திவரதர் டிக்கெட் விற்பனையில் முறைகேடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயிலில் கடந்த 2019ம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நடந்தது. இதில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அத்திவரதர் வைபவத்தின் போது டிக்கெட் விற்பனையில் முறைகேடு  நடந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், சமூக ஆர்வலர்கள் பலர் தகவல் கேட்டனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலை துறை ஆணையர் பிரபாகர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக ஆன்லைன் டிக்கெட் மூலம் விற்பனையான டிக்கெட் குறித்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் திருவேற்காடு இணை ஆணையர் லக்ஷ்மணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இணை ஆணையர் தலைமையில் 3 பேர் குழு கோயிலின் செயல் அலுவலகத்தில் கணக்கு பதிவேடு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், உதவி ஆணையர் (பொறுப்பு) ஜெயா ஆகியோரும் உள்ளனர்.



Tags : Attivarathar , Attorney ticket, abuse, officers, investigation
× RELATED அத்திவரதருக்கு விலை உயர்ந்த பட்டு...