பீட்டர் அல்போன்சுக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும், அரசியல் தலைவர்கள், பலர் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சியினர், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>