×

மதுரை-போடி அகல ரயில்பாதையில் ஆண்டிபட்டி-தேனி இடையே இன்ஜின் சோதனை ஓட்டம்

தேனி: போடி - மதுரை அகல ரயில் பாதையில் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை நேற்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரை வரையிலான மீட்டர்கேஜ் ரயில்பாதை கடந்த 2010 டிச. 31ம் தேதி நிறுத்தப்பட்டது. போடி-மதுரை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நடந்து வருகிறது. மதுரையிலிருந்து போடி வரை ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை தண்டவாளங்கள், மேம்பாலங்கள், ரயில் நிலையங்கள் கட்டும் பணி முடிவடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலும், இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி ரயில் நிலையம் வரையிலும் சுமார் 58 கி.மீ. தூரத்திற்கு சோதனை ரயில் ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில் இன்ஜின் உசிலம்பட்டி வழியாக ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அங்கிருந்து தேனி ரயில் நிலையம் வரை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை ஏராளமானோர் கூடியிருந்து ரயில் இன்ஜின் செல்வதை பார்த்து குதூகலித்தனர்.

Tags : Andipatti ,Theni ,Madurai ,Bodi , Madurai-Bodi wide railway line between Andipatti-Theni Engine test flow
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’