பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டரை ரூபாய் வரை குறைக்க வழி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100 என்ற அளவில் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில் அதை குறைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கலால் வரி குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாய் 50 காசு வரை அரசுக்கு வருவாய் இழப்பின்றி குறைக்க முடியும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கலால் வரி குறைப்பை மேற்கொள்வதால் வரும் நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை நிர்ணயித்த இலக்கிற்குள் வைத்திருக்க முடியும். வரி குறைப்பால் மக்களுக்கு நன்மை கிடைப்பதுடன் பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளும் ஏற்படும். தற்போதைய நிலையில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 31 ரூபாய் 80 காசும், டீசல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் 90 காசும் கலால் வரி விதிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>