விராலிமலை, ராசிபுரத்தை தொடர்ந்து பழனி தொகுதியிலும் தேர்தல் அலுவலகத்தை திறந்தது பா.ஜ.க!: செய்வதறியாது திகைக்கும் அ.தி.மு.க..!!

மதுரை: விராலிமலை, ராசிபுரத்தை தொடர்ந்து பழனி தொகுதியிலும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் அலுவலகத்தை திறந்திருப்பது அதிமுக-வினரை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிமுக-வுக்கும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் பழனி தொகுதியும் தங்களுக்கு வேண்டும் என்று கூறி அங்கு பாரதிய ஜனதாவினர் தேர்தல் அலுவலகத்தை திறந்துள்ளனர். அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை வரவழைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

இது அதிமுகவினரிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி தொகுதி அதிமுக, திமுக கட்சிகள் மாறி, மாறி வெற்றிபெறும் இடமாகும். தற்போது அங்கு திமுகவை சேர்ந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆக உள்ளார். ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலையில் பாரதிய ஜனதாவினர் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளனர். அதேபோல் ராசிபுரத்திலும் பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக இப்போதே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டன. பாரதிய ஜனதாவின் இந்த நடவடிக்கைகளால் அதிமுகவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

Related Stories: