சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு பா.ஜ.க காரணம்?: மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி புகார்..!!

கோவை: சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு பாரதிய ஜனதா பின்புலமாக இருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். உலகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடு இந்தியா என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இதற்கு பாரதிய ஜனதாவின் தவறான ஆட்சியே காரணம் என்று அவர் விமர்சித்தார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்தியாவில் 15 கோடி மக்கள் வேலை இழந்தனர். இந்தியாவில் பெரும் பணக்காரர்களுக்கு மேலும் பணம் சேர்ந்தது. உலகிலேயே இந்தியாவில் தான் பணக்காரர்கள் சொத்து மிகப்பெரும் அளவுக்கு வளர்ந்தது. மோடி நண்பர்கள் வளர்ச்சி பெறவே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்றும் யெச்சூரி தெரிவித்தார்.

பெரும் முதலாளிகள் மேலும் வளரும் கொள்கையை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி வருவதால் கோவை போன்ற தொழில் நகரங்களில் சிறு, குறு தொழில் முற்றிலும் அழிந்துவிட்டதாக சீதாராம் யெச்சூரி வேதனை தெரிவித்தார். ஹாங்ப்பூர்பத்தி தலைநகரான கோவையில் தற்போது அந்த தொழில் நசிந்துவிட்டதாக அவர் கூறினார். பாஜகவின் அனைத்து கொள்கைகளையும் ஆதரிக்கும் அதிமுக ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக்கொண்டார்.

Related Stories:

More
>