தமிழகத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி விற்பனை நிலையங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழகத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி விற்பனை நிலையங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளார். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து லலிதா ஜுவல்லரியின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் விவகாரம் குறித்து வருமானவரித் துறையினரும் தொடர்ந்து சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் இருந்து வருமானவரித் துறையினருக்கு பணப்பட்டுவாடா தொடர்பாகவும், வரி ஏய்ப்பு தெடர்பாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று அரசு ஒப்பந்ததாரர்கள் 2 பேர் வீட்டில் சோதனையானது நடைபெற்று ரூ.3 கோடி அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு பரபரப்பு தகவலாக பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித் துறையினர் தகவல் தெரிவிதித்துள்ளார். முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகவும் குறிப்பாக ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

நீண்ட காலமாக இவர்களது கணக்குகளை கண்காணித்து வந்ததாகவும் தற்போது வரி ஏய்ப்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த சோதனையானது நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவிக்கின்றனர். 10 இடங்களில் நடக்கும் சோதனை என்பது அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளார். சோதனையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு இடமாக இந்த சோதனையானது நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 நாட்களுக்கு இந்த சோதனையானது நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து இந்த சோதனையின் முடிவில்தான் எவ்வளவு பணம் வரி ஏய்ப்பு மற்றும் வருமானம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>