×

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.!!!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு  தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும்  பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, இந்நிலையில் இன்று 4-வது நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர். மேலும் பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

* ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

* டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், டிராத் ராம் ஷா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

* மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

* மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

* டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது பெற்றோர் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர்.

* இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர்.

முதல்நாள்: மார்ச் 1-ம் தேதி

பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

2-ம் நாள்: மார்ச் 2-ம் தேதி:

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், முக்தார் அப்பாஸ் நக்வி, கிஷன் ரெட்டி, கர்நாடக அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பி.சி. பாட்டீல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தேசிய மாநாட்டு எம்.பி.பாரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

3-ம் நாள்: மார்ச் 3-ம் தேதி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

இந்தியாவில் மொத்தம் 777 எம்.பி.க்களில், 366 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Former ,Manmohan Singh , First dose of corona vaccine: Former Prime Minister Manmohan Singh today; 2 state governors and chief ministers put. !!!
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...