குக்கர் கட்சிக்காரங்க வாட்ஸ் அப்பில் மோதல்

அமமுக வேலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் இருந்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய நகர ஒன்றியங்களில் ஜெயந்திக்கு ஆதரவாக ஒரு அணியும் எதிர்ப்பாக ஒரு அணியும் என்று 2 அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மண்டல பொறுப்பாளரான சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ பார்த்திபனுக்கும் ஜெயந்தி பத்மநாபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தி மீது தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றதாம். இதற்கிடையே திடீரென குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்த சதீஷ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஜெயந்தி பத்மநாபன் அமைப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்ட செயலாளராக சதீஷ் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு ஜெயந்தியின் ஆதரவாளராக இருந்த குடியாத்தம், பேரணாம்பட்டு நகர ஒன்றிய செயலாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதில் புதிய நிர்வாகிகளை அமமுக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று ஜெயந்தி பத்மநாபன் தரப்பினர் கூறுகின்றனர். அதேபோல் மாவட்ட செயலாளர் சதீஷ் தரப்பினர். புதிய நிர்வாகிகள் குறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்ததாக கூறி, அமமுக போஸ்டர், நோட்டீஸ்,

திருமண அழைப்புகளில் நகர ஒன்றிய செயலாளர் என்று பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் ஜெயந்தி ஆதரவாளர்களுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வப்போது வாட்ஸ் அப்பில் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இலையில் விரிசல், ஏற்பட்டு குக்கர் வந்தது, அந்த குக்கரிலும் இப்போது குடியாத்தம் தொகுதியில் மோதல் ஏற்பட்டிருக்கிறது என்று அந்த ஏரியாவில் பேசிவருகிறார்கள்.

Related Stories:

>