வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு

மதுரை: மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மணப்பாறை அருகே பச்சை மலை மற்றும் பெரியமலை வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன. வனவிலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக 3 இடங்களில் சுரங்க பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை.

அதை அமைக்கவும் தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் விலங்குகள் கடந்து செல்ல வசதி செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories:

>