×

அதிமுகவில் சசிகலா?.. சி.டி.ரவி பேட்டி

சென்னை: சசிகலா இணைப்பை அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான் முடிவெடுப்பார்கள் என்று பாஜ தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார். சென்னையில் தமிழக பாஜ தலைமை அலுவலமான கமலாலயத்தில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் சசிகலாவை இணைப்பது பற்றி கேட்கிறீர்கள். சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரது பலமும், பலவீனமும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.

அதிமுகவில் அவர்களை இணைப்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கக் கூடிய அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sasikala ,AIADMK ,CD Ravi , Sasikala in AIADMK? .. Interview with CD Ravi
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...