11 கிராமங்களில் குடகு கலெக்டர் ஆய்வு

குடகு: குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கண்டறிய சோமவாரப்பேட்டை தாலுகாவில் உள்ள 11 கிராமங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் பார்வையிட்டார். குடகு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலங்கட்டி மழையால் சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காபி, நெல், வாழை, கரும்பு உள்பட விளைபயிர்கள் நாசமானது.  இதையடுத்து சோமவாரப்பேட்டை தாலுகாவில் உள்ள 11 கிராமங்களுக்கு மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் அதிகாரிகளுடன் சென்று மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது மழை பாதிப்பு நிவாரணங்களை விரைந்து தர நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற கலெக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>