காவேரி தமிழர் சங்கம் சார்பில் அரேகாடுவில் விளையாட்டு போட்டி

குடகு: காவேரி தமிழர் சங்கம் சார்பில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  குடகு மாவட்ட காவேரி தமிழர் சங்கம் சார்பில் சித்தாபுரா தாலுகா அரேகாடுவில் உள்ள பள்ளி மைதானத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்காக பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவை சங்கத்தலைவர் திருமலை ராஜன் தொடங்கி வைத்தார்.இதில் கிரிக்கெட், கோலப்போட்டி, இசை நாற்காலி, கபடி, லெமன் ஸ்பூன், ஓட்டபந்தயம் உள்பட பல்வேறு கிராமிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>