கிரேட்டர் நொய்டாவில் சோகம்: தற்செயலாக துப்பாக்கி வெடித்து காவலாளி பலி

நொய்டா: கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தின்  நுழைவு வாயிலின் தடுப்பு அருகே பாதுகாப்பு பணியில் அந்த காவலர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அங்குள்ளவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவரது துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்து கீழே சரிந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த நபர் உபி மாநிலம் ரேபரேலி மாவட்டத்தை சேர்ந்த மதன்பால் சிங் என்பது தெரியவந்தது. மேலும், தடய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய நொய்டாவின்  துணை கமிஷனர் ஹரிஷ் சந்தர் தெரிவித்தார்.

Related Stories: