×

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.!!!

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு  தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும்  பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு  நேற்று முன்தினம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, நேற்று முதன்தினம் முதல்நபராக டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.  ஜி 20 நாடுகளின் குழுவில், தடுப்பூசி போடப்பட்ட ஒன்பதாவது தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடி தொலைக்காட்சியில் தடுப்பூசி போட்ட முதல் தலைவர், அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நேற்று

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், முக்தார் அப்பாஸ் நக்வி, கிஷன் ரெட்டி, கர்நாடக அமைச்சர்கள் கே.எஸ். ஈஸ்வரப்பா, பி.சி. பாட்டீல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தேசிய மாநாட்டு எம்.பி.பாரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று 3-வது நாளில், டெல்லியில் உள்ள ஆர்.ஆர் மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

* சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் மற்றும் அவரது மனைவி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை கேங்டோக்கிலுள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் எடுத்துக் கொண்டார்.

* மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஷில்லாங்கில் எடுத்துக் கொண்டார்.

* மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் அவரது மனைவி லட்சுமி பூரி கவுஷம்பியில் உள்ள யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.

* கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று பி.எச்.சி சங்காலியில் எடுத்துக் கொண்டார்.

* கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கோவிட் -19 தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.

இந்தியாவில் உள்ள மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் மற்றும் மார்ச் 8-ம் தேதி பாராளுமன்றம் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு தடுப்பூசி போடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்டில் மொத்தம் 777 எம்.பி.க்களில், 366 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 தடுப்பூசியின் 14 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வழங்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. மொத்தம் 208,791 டோஸ் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொமொர்பிடிட்டிகளுடன் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவை முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : President ,Ramnath Kovind , First dose of corona vaccine: President Ramnath Govind and 2 Chief Ministers today !!!
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...