×

பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடியில் கூடுதல் லாபம்: நீடாமங்கலம் விவசாயி அசத்தல்

நீடாமங்கலம்: பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்ததில் கூடுதல் லாபம் கிடைத்ததாக விவசாயி கூறினார்.நீடாமங்கலம் அருகில் காளாச்சேரி, மேலபூவனூர் செல்லும் வழியில் விவசாயி ராஜேஷ்குமார் என்பவர் பாரம்பரிய நெல்  ரகங்களை சாகுபடி செய்தார். அதன்படி கைவர சம்பா 5 மா (1.75 ஏக்கர்) நடவு செய்து 25 மூட்டையும், கருப்பு கவுனி ஏக்கருக்கு 14  மூட்டையும், பர்மா கவுனி ஏக்கருக்கு 14 மூட்டையும், மாப்பிள்ளை சம்பா 3 ஏக்கருக்கு 50 மூட்டையும், தூயமல்லி 4.5 மாவுக்கு (1.50  ஏக்கர்) 13 மூட்டையும் இயந்திரம் மூலம் அறுவடை செய்தார். தற்போது இந்த நெல் ரகங்களை காயவைக்கும் பணியில் வைக்கும்  பணியில் விவசாயி ராஜேஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

இதிகுறித்து பாரம்பறிய நெல் விவசாயம் செய்த விவசாயி ராஜேஷ்குமார் கூறுகையில், நான் நீடாமங்கலம் பகுதியில் முதல்  முயற்சியாக நேரடி விதப்பின் மூலம் பாரம்பறிய நெல் ரகங்களை சாகுபடி செய்தேன். குறைந்த மகசூல் கிடைத்தாலும். இதுவே  எனக்கு ஒரு பெரிய வெற்றியாகும். தொடர்ந்து இதே நெல்லை சாகுபடி செய்ய உள்ளேன்.
அவ்வாறு சாகுபடி செய்யும்போது வரும் ஆண்டில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நெல் ரகங்களை  ரசாயன உரமின்றி இயற்கை உரத்தை பயன்படுத்தியே சாகுபடி செய்துள்ளேன்.

இந்த ரகத்தை உணவாக பயன்படுத்தினால்  சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. இந்த இயற்க்கை  பாரம்பறிய நெல் ரகத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் ஆள் செலவு, நடவு செலவு, மருந்து செலவு, தண்ணீர் செலவு  மிச்சமாகிறது. ரசாயன உரத்தை பயன்படுத்தி சார்பு விவசாயம் செய்தால் வரும் காலத்தில் அதிக மகசூல் பெற வாய்ப்பு உள்ள  பெருமிதத்துடன் கூறினார்.

Tags : Asathal , Traditional paddy varieties Extra profit in cultivation: Needamangalam farmer astounding
× RELATED பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் வெற்றி: பவினா அசத்தல்