எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான்; மநீம, சமக, ஐஜேகே கூட்டணி உறுதி: பொதுக்குழுவில் சரத்குமார் பேச்சு

தூத்தக்குடி: தூத்தக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் உரையாற்றினார். சமக கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என கூறினார். ஆவின் நிலையத்தில் இயற்கையான பனைபால் விற்பனை செய்ய நடவடிக்கை தேவை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார். வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 90% இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களும் 90% வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என பேசினார்.

மேலும் ஐயா வைகுண்டர் அவதார தினத்தை பொது விடுமறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார். 2007-ல் சமக தொடங்கியதில் இருந்து பல சோதனைகளை சந்தித்திருக்கிறோம் என கூறினார். எனவே இநத சட்டப்பேரவை தேர்தலில் சமக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என கூறினார். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களை சமக கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்தார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் சமக வேட்பாளராக லாரன்ஸை அறிவித்தார். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் பேசினார். மேலும் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியானது எனவும் கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடன் முதல்கட்ட பேச்சுவார்ததை முடிந்தள்ளது, தொடர்ந்து பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது என கூறினார்.

Related Stories: